விவிலியத்தில் ஏமாற்றல் - வேத வாக்கியம்

புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசு கிருத்துவின் கொள்கைகள், பழைய ஏற்பாட்டிலுள்ள யூத மதக் கொள்கைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு ஏற்ப புதிய ஏற்பாட்டு வசனங்களுக்கு, ஏமாற்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அவற்றின் முக்கியமான ஒன்று

"வேத வாக்கியங்கள் யாவும் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.' (2தீமோ. 3:16) என்னும் பகுதியாகும்.

உலகத்தில் எத்தனையோ வேதங்கள் இருக்கின்றன. இந்துக்களின் வேதம் இருக்கிறது. இசுலாமியர்களின் வேதம் இருக்கிறது. கிருத்தவர்களின் வேதம் இருக்கிறது. யூதர்களின் வேதம் இருக்கிறது. இவற்றில் இங்கே இந்த வாக்கியத்தால் குறிக்கப்படும் வேதம் எது? என்று கூர்ந்து ஆராய்ந்தால், இந்த அதிகாரத்தின் 10ஆம் வசனத்தில் இருந்து தெளிவாக கிருத்துவ வேதத்தை மட்டுமே குறிக்கின்றனவே தவிர, யூத வேதத்தை நினைப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஆனால், ஐரோப்பியர் அரசியலுக்கு உட்பட்ட திருச்சபைத் தலைவர்கள் இந்த வசனம், உலகிலுள்ள வேதங்களில், யூத வேதத்தையும் கிருத்துவ வேதத்தையும் இணைத்துக் கூறுகிறது என்று போதிப்பது, இயேசு கிருத்துவின் ஆன்மீகக் கொள்கைகளை, யூத மதத்தின் அரசியல் கொள்கைகளுக்கு உட்படுத்தும் ஏமாற்று போதனை என்பது விளங்கும்.

ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்குப் பழைய ஏற்பாடு தேவையே தவிர, புதிய ஏற்பாடு பயன்படாது. இதனால் புதிய ஏற்பாட்டுக் கருத்துக்களைப் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களுக்கு உட்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இன்றியமையாததாகிறது.

புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசு கிருத்துவின் கொள்கைகளின்படி,

பணக்காரன் நரகத்திற்குரியவன்;
பிரபுக்கள் நரகத்திற்கு உரியவர்கள்;
அரசன் நரகத்திற்கு உரியவன்;

என்றா ரோம ஆட்சியாளர் போதிக்க முடியும்?

"பணக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;
பிரபுக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
அரசன் ஆசீர்வதிக்கப்பட்டவர்"

என்று கற்றுக் கொடுக்கப் புதிய ஏற்பாடு பயன்படாது. பழைய ஏற்பாடு தான் பயன்படும். இதற்கேற்ப புதிய ஏற்பாட்டுக் கருத்துகளைப் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களுக்கு உட்படுத்திப் போதிக்க வேண்டிய நிலை ஆட்சியாளர்களின் தயவில் வாழுகிறவர்களுக்கு ஏற்படுகிறது.

இந்த நிலையே உலகத் திருச்சபைகளில் நடைபெற்று வருகிறது.

இதற்கேற்பவே "பரலோக இராஜ்யம்" என்பது "தேவனுடைய இராஜ்யம்" அல்லது "கடவுளுடைய இராஜ்யம்" என்று ஆக்கப்பட்டு உள்ளது.

"பரலோக இராஜ்யம்" என்பது ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையைக் குறிப்பதை முன்னர் கண்டுள்ளோம்.

"தேவனுடைய இராஜ்யம்" என்பது அதற்கு நேர் எதிரான தனியுடைமை வாழ்க்கை முறையைக் குறிப்பது என்பது எண்ணிப்பார்த்தால் புரியக் கூடிய ஒன்றாகும்.

எவ்வாறு?

கடவுள் அல்லது தேவன் என்பது யூதர்களுடைய உள்ளத்தில் அவர்களுடைய விடுதலைக்குக் காரணமான யெகோவா கடவுளையே நினைவுப்படுத்தும். "தேவனுடைய இராஜ்யம்" என்பது யெகோவா கடவுளின் அருமைப் பிள்ளைகளாகிய இசுரவேலின் இராஜ்யத்தை நினைவுபடுத்தும்.

"இசுரவேல் இராஜ்யம்" என்பது இசுரவேலருக்கு மட்டுமே உரிமையுடைய தனியுடைமை இராஜ்யம் என்பதைக் குறிக்கிறது. ஆகவே உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்குப் பொதுவான ஆன்மீகப் பொதுஉடைமை வாழ்க்கை முறை என்பது மாற்றப்பட்டு, இசுரவேலரின் தனியுடைமை வாழ்க்கை முறையைக் குறிப்பதாக மாற்றி, ஆன்மீக வாழ்க்கை முறை அரசியல் வாழ்க்கை முறைக்கு மாற்றப்படுகிறது.

இசுரவேலரின் அரசியல் வாழ்க்கை முறையைப் பாராட்ட வைத்து அதன் வழி ரோம அரசியலின் வாழ்க்கை முறையை நியாயப்படுத்த அது பயன்படுகிறது.

புதிய ஏற்பாட்டுக் கோட்பாட்டின்படி

"கடவுள் இராஜ்யம்" - என்பது வேறு;
"பரலோக இராஜ்யம்" - என்பது வேறு
.

"கடவுள் இராஜ்யம்" என்பது கடவுள் எப்பொழுது முதல் இருக்கின்றாரோ? அப்பொழுது முதல் கடவுள் இராஜ்யம் இருக்கிறது. கடவுள் இராஜ்யத்திற்கு வெளியே, அவருடைய ஆட்சிக்கு வெளியே வேறு எந்த ஆட்சியையும் கிடையாது; இருக்க முடியாது.

கடவுள் மனிதனைப் படைத்த பொழுது அவருடைய ஆட்சி உரிமையில் மனிதனுக்குப் பங்கு கொடுத்தார்.

"பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." (ஆதி. 1:26-28)

மனிதன் அந்த ஆட்சி உரிமையை சாத்தானிடத்தில் இழந்து விட்டான். இதனால் பூலோக ஆட்சி உரிமை சாத்தானிடம் இருக்கிறது.

இந்த நிலையே லூக். 4:5-7 இல் விளக்கப்படுகிறது.

"பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்;நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்." (லூக். 4: 5-7)
1. ஆகவே கடவுளுடைய இராஜ்யத்தின் ஒரு பகுதியாக சாத்தானுடைய இராஜ்யம் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் சாத்தான் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்டே ஆக வேண்டும்.

2. இயேசு கிருத்து போதித்த பரலோக இராஜ்யமும் கடவுளுக்கு எதிரானது அன்று. இதனால் பரலோக இராஜ்யமும் கடவுளின் இராஜ்யத்தின் ஒரு பகுதியே.
 
3. இவற்றைப் போன்றே, கிருத்துவுக்கு எதிரான அந்திக் கிருத்துவும் கடவுளை எதிர்க்க முடியாது. அந்திக் கிருத்துவின் இராஜ்யமும் கடவுள் இராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

இதனால் கடவுள் இராஜ்யத்திற்குள்,

1. சாத்தானின் இராஜ்யம்
2. பரலோக இராஜ்யம்
3. அந்திக் கிருத்துவின் இராஜ்யம்.

ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்றன.

இதனால் பரலோக இராஜ்யம் என்பதை கடவுளின் இராஜ்யம் என்று குறிக்கும் பொழுது, பரலோக இராஜ்யத்தின் தனிச் சிறப்பு மறைக்கப்படுகிறது. ஆகவே எந்த விதத்திலும் இது தவறானது ஆகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

3 கருத்துகள்:


மத்தேயு கிரேக்கத்தில் தான் புனையப்பட்டது.
http://www.bible.ca/jw-YHWH-hebrew-matthew.htm

யூதரல்லாதவர்களை நாய் என்னும் கேவலம்

கானானியப் பெண்ணின் நம்பிக்கை
(மாற் 7:24 - 30)
மத்தேயு15:21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் ' என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார்.26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார்.28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

இயேசு பலவகை நோயாளர்களுக்குக் குணமளித்தல்
29 இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.30 அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.31 பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

@ Yahweh Fraud

//மத்தேயு கிரேக்கத்தில் தான் புனையப்பட்டது//

Actually there are various records that mention that Matthew wrote his gospel in Aramic.

"Matthew also issued a written Gospel among the Hebrews in their own dialect, while Peter and Paul were preaching in Rome and laying the foundation of the Church. (Against Heresies 3:1:1)" - Irenaeus of Lyons

"bishop of Hieropolis in Asia Minor, wrote, "Matthew compiled the sayings [of the Lord] in the Aramaic language, and everyone translated them as well as he could" (Explanation of the Sayings of the Lord [cited by Eusebius in History of the Church 3:39])."

Maththew Wrote his Gospel in Aramic and at a later time the original was destroyed!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு