சில கேள்விகள் சில பதில்கள்...!!!

பல பதிவுகள் கண்டாயிற்று. அவற்றினோடு பல கேள்விகளும் தான். சில கேள்விகளுக்கு பதில்கள் தந்து இருந்தாலும் பல கேள்விகளுக்கு 'பின்னர் காண்போம்' என்ற ஒரே பதிலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் சரி ஒரு சில கேள்விகளுக்கு பதில்களை தனியாகவே கூறி விடலாம் என்ற எண்ணம் தோன்றவே இந்தப் பதிவு.

கேள்வி : தோமா தமிழ்நாட்டில் கிறித்துவம் பேசினால், பிள்ளையார் – கிறிஸ்து ஒன்று என்றால்பிள்ளையார் தமிழ்நாட்டில்தானே தோன்றியிருக்கவேண்டும்? அதுவும் தோமையார் வந்து கொஞ்ச காலத்தில்? ஆனால், பிள்ளையார் தமிழ்நாட்டிற்கு வந்ததே 10-ம் நூற்றாண்டு. இதற்கு என்ன விளக்கம் சொல்கிறீர்கள்?

பதில்: தோமா தமிழகத்திற்கு மட்டுமே வரவில்லை. அவர் 20 வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றி கருத்துக்களை பரப்பி இருக்கின்றார். சரி இப்பொழுது பிள்ளையார் வடக்கில் இருந்து தெற்கே வந்ததன் காரணத்தினைக் காண்போம். அதற்கு முன் கீழே உள்ள படத்தைக் காண்போம்.




காண்பதற்கு பிள்ளையாரினைப் போன்றே தோற்றம் கொண்டு இருந்தாலும் இவர் பிள்ளையார் இல்லை. இவர் பார்சுவநாதர். சமண சமயத்தின் இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரர். காலம் ஏறக்குறைய கி.மு ஏழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகின்றது. இவர் மகாவீரருக்கு முந்தியவர். இவருக்கு சமண சமயத்தில் பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்றில் இவர் ஒரு பிறவியில் யானையாக பிறந்ததாகவும் அப்பிறவியில் இவரின் பகைவன் பாம்பாகப் பிறந்து இவரின் தலையில் கொட்டி இவர் அமைதியாக மரணமுற்றதாகவும் கூறப்படுகின்றது. அக்கதையின் படியே இவருக்கு யானைத் தலையும் தலைக்கு மேல் பாம்பு நிற்பது போலவும் வடிவம் அமைந்து இருக்கின்றது. மேலும் யானையை வழிப்பட்ட சில குழுக்களும் வட இந்தியாவில் இருந்து இருக்கின்றனர். நிற்க.

இந்நிலையில் தான் பிற்காலத்தில் கிருத்துவின் கருத்துக்களை சுமந்துக் கொண்டு தோமா இந்தியா வருகின்றார். புது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுவும் அவர்களின் பழக்க முறைக்கு ஏற்றார் போலவே கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் தான் இறைவன் மக்களுக்காக தன் உயிரினைத் துறந்தான் என்ற செய்தியை பரப்ப மக்களிடம் அன்று இருந்த யானை வழிபாடு முறையையும் பர்சுவனாதரின் இந்தக் கோலத்தையும் மக்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்றே நாம் கருத முடிகின்றது. இதன் அடிப்படையில் தான் பிள்ளையார் வடக்கே இருந்து தெற்கே வருகின்றார்.
**********************************************************************************
கேள்வி: சைவ வைணவம் மட்டுமே இந்து சமயங்களாக பண்டைய தமிழகத்தில் இல்லை அல்லவா. அப்படி இருக்க அவற்றினை நாம் சைவ வைணவ சமயங்களாக கருத முடியுமா?

பதில்: உண்மை தான் நண்பரே. இந்து சமயங்கள் எனப்படுபவை மொத்தம் ஆறு சமயங்கள் ஆகும். ஆனால் அவற்றில் நான்கு சமயங்களுக்கு சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கின்றார். இரண்டிற்கு விஷ்ணு இருக்கின்றார்.
சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
சைவம் - சிவன் - அம்மை - மகன்
சாக்தம் - சிவன் - சக்தி - மகன்
கௌமாரம் - சிவன் - சக்தி - குமரன்
காணாபத்தியம் - சிவன் - சக்தி - கணபதி
விஷ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
வைணவம் - சிவன் - விஷ்ணு - பிரமன்
சௌரம் - சிவன் - விஷ்ணு - ஐயப்பன்.

அனைத்து சமயங்களும் சிவன் அல்லது விஷ்ணுவையே சார்ந்து இருப்பதால் இவை அனைத்தையுமே நாம் சைவ வைணவ சமயங்களாக கருதலாம்.
**********************************************************************************
கேள்வி: இந்து சமயத்தின் தத்துவம் சித்து - அசித்து - ஈசுவரன் அல்லது பதி - பசு - பாசம் தானே. இவை கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடுக்கு வேறானதாக அல்லவா இருக்கின்றது. அவ்வாறு இருக்க கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடு எவ்வாறு சைவ வைணவ சமயத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்றீர்கள்.

பதில்: நண்பரே... பதி-பசு-பாசம் என்பதோ அல்லது சித் - அசித் - ஈசுவரன் என்ற தத்துவங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். ஆனால் மூ ஒருமைக் கோட்பாடோ இறைவனின் நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். இதனை விளக்க பின் வரும் பாடல்களைக் காண்போம்.


மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனைத் தென் இலங்கை எரி எழ  செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ - நம்மாழ்வார் - திருவாய்மொழி (3-6-2)

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.  - திருமங்கை ஆழ்வார் (3-1-10).

அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே.  - சிவஞானசித்தியார்(1:38)

மேலே கண்ட வரிகள் மூலம் இறைவன் ஒருவன் தான் ஆனால் மூன்று நிலையில் விளங்குகின்றான் என்ற அவர்களின் கருத்து விளங்குகின்றது. இக்கருத்தும் கிருத்துவத்தின் கருத்தும் ஒன்று போல் இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஏன் இந்த ஒற்றுமை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.


சரி...கேள்விகள் இப்போதைக்கு போதும். மற்ற கேள்விகளுக்கு பதிலினை நம்முடைய பயணத்தில் 'பின்னர் காண முயற்சிப்போம்...'

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30

1 கருத்துகள்:

இஸ்லாம் இந்த மண்ணின் மார்க்கம்
தொடர் 16

படைத்த இறைவனை வணங்க வேண்டிய மனித சமூகம் விரட்டப்பட்ட சைத்தானை வணங்குகின்றனர்.

இப்லீஸ் என்றும் லூசிஃபர் என்றும் அழைக்கப்படும் அந்த சைத்தான் மனித கண்ணுக்கு தெரியும் வஸ்த்துக்கள் வழியாக தன்னை வணங்கும் படி செய்து வந்தான்.

சூரியன் சந்திரன் விடிவெள்ளி கடல் ஆறு இடி மின்னல் பூகம்பம் காற்று ஆகாயம் மரம் விலங்கு பறவை இறந்த மனிதன் இருக்கும் மனிதன் இவற்றில் எல்லாம் இறைவன் இருப்பதாக கற்பித்து அந்த வணக்கங்களை தனதாக்கிக்கொண்டான்.

அறிவுடையோரும் அறிவற்றோரும் ஏற்கும் வகையில் அழகாக வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொடுத்தான் இப்லீஸ்.

திருக்குர்ஆன் கூறுகிறது.
இவ்வாறு இறைவனை மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை எல்லாம் அழகாக்கப்பட்டுள்ளன. (6:12)

பல தெய்வக்கொள்கைகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் முக்கிய இடம் பிடித்தது திரித்துவம் எனப்படும் மூன்று தெய்வக்கொள்கையாகும்.

சூரியன் விடிவெள்ளி இல்லாத திரித்துவமோ பல தெய்வமோ இல்லையென்று சொல்லலாம்.

மனிதர்களை கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்த. அந்த மனிதரின் தாய் கன்னி என்றும். தந்தை சூரியக்கடவுள் என்றும் கற்பனை செய்யப்பட்டது. இந்த சித்தாந்தமே திரித்துவம் என்னும் பெயரில் பிரபலமானது.

கிரேக்கத்தில் Zeus. Athena. Apollo

மஹாயான பௌத்தத்தில் த்ரிகயா புத்தரின் மூன்று உடம்பு.

எகிப்தில் Osiris Isis Horus

இந்து மதத்தில் பிரம்மா விஷ்ணு சிவன்.
சக்தி சரஸ்வதி லட்சுமி

பாரசீகத்தில் மித்ரா இந்த்ரா வருணன்.

அரபு நாட்டில் லாத் மனாத் உஸ்ஸா.

கிறிஸ்தவத்தில் பிதா குமாரன் பரிசுத்த ஆவி

டாவோசியத்தில் Fu. Lu. Shou

இப்படி அறியாமை சமூக மக்கள் கடவுள் ஒன்றல்ல மூன்று அல்லது மூன்றும் ஒன்றே என்றும் ஒன்றில் மூன்று என்றும் கூறுகின்றனர்.

மூன்று தெய்வமோ பல தெய்வமோ அதில் சூரிய வழிபாடே மிகைத்திருந்தது.
அந்த சூரியனையும் இரு கொம்புகளுக்கு மத்தியில் கண்டு வணங்கும் நிலையே பி ரபலமாக இருந்தது.

திருக்குர்ஆன் இது பற்றி விரிவாக சொல்கிறது.
மூஸா அலை அவர்கள் தன்னுடைய யூத சமூகத்தை தன் தம்பி ஹாரூனிடம் ஒப்படைத்து விட்டு இறைவன் கட்டளை ஏற்று சினாய் மலை செல்கிறார்.இவ்வேளையில் சாமூரி என்பவன் தங்கத்தால் காளைக்கன்று செய்து அதற்கு உண்மையான குரலும் கொடுத்து சொல்கின்றான்.மூஸாவின் இறைவனும் உங்கள் இறைவனும் இது தான் . இது தெரியாமல் மூஸா இறைவனைத்தேடி எங்கெங்கோ அலைகிறார். ஹாரூன் தவிர்த்து அந்த யூத கூட்டமும் காளைக்கன்றை வணங்குகின்றனர்..

மூஸா அலை அவர்களுக்கு முன்பே காளை மாடு எருமை மாடு பசு மாடு செம்பறி ஆடு எல்லாம் வணக்கத்திற்குறியதாக இருந்தது.
இன்னும் சொல்வதானால் இவைகளின் கொம்புகளுக்கு மத்தியில் சூரியனை அல்லது விடிவெள்ளியை கடவுளாக கண்டு வணங்குவதாக நம்பினர்.

ஆப்ரிக்காவில் எருது கொம்பின் மத்தியில் சூரியனையும்.

இந்தியாவில் பசுமாட்டுக்கொம்பின் மத்தியில் சூரியன் அல்லது சிவனையும்.

சிந்து சமவெளியிலும் எகிப்திலும் மனித தலையில் கொம்புக்கு மத்தியில் சூரியனையும்
கடவுளாக கண்டு வணங்கினர்.

அக்காடியர்கள் ஷாமாஸ் எயா என்கி எனும் பெயரில் சூரியனை வணங்கினர்.

தம்மூஸ் சூரியக்கடவுளின் புதல்வர். தம்மூஸின் தாய் கன்னி.

இயேசு கடவுளின் குமாரர் .இயேசுவின் தாய் கன்னி.

கர்ணன் சூரியக்கடவுளின் குமாரர். கர்ணனின் தாய் குந்திதேவி கன்னி.

கார்கோன் மன்னன் சூரியக்கடவுளின் குமாரர். கார்கோனின் தாய் கன்னி.

கடவுளின் குமாரர்களாக வணங்கப்படுபவர்களின் தந்தை சூரியன் என்று சொல்லி. அந்த சூரியனை இரு கொம்புகளுக்கு மத்தியில் காட்டும் சூட்சமம் என்ன.

கடவுளை கொம்புகளுக்கு மத்தியில் சூரியனாக காட்டி. பின் கொம்புகளுக்கு மத்தியில் ஒளியாக காட்டி. பின் அந்த ஒளி விடிவெள்ளியாக காட்டி. நானே வணக்கத்திற்குறியவன்.

நானே வணக்கத்திற்குறிய விடிவெள்ளி.
நானே வணக்கத்திற்குறிய லூசிஃபர்.
என்னும் நிலைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலைபாட்டை ஏற்ற யூத சதுவேயர்கள் அதை இஸ்லாம் தவிர்த்து மற்ற மதங்களில் நுளைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு